Reviews | விமர்சனங்கள்
அட இது எங்க ஊரு அர்ஜுன் ரெட்டி. ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரை விமர்சனம்.
பியார் பிரேமா காதல் என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பின் ( விஜய் சேதுபதி- காயத்ரி) “புரியாத புதிர்” இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி அவர்களுடன் இணைந்த படம்.

PPK படத்தில் அம்மாஞ்சி ஐ டி ஊழியனாக நாம் தினமும் சாலையில் சந்திக்கும் கதாபாத்திரம் என்றால், இந்த IRIR படத்தில் எதர்கெடுத்தாலும் கோபப்படும் வி ஐ பி யூத்தாக கலக்கியுள்ளார். கூலிங் க்ளாஸ், ஷேவ் செய்யாத தாடி, ராயல் என்பீல்ட் என இன்றைய இளசை பிரதிபலிக்கிறார் ஹரிஷ் கல்யாண்.
கதை
சரக்கு, தம் அடிக்காத கௌதமாக ஹரிஷ் கல்யாண். தன் நண்பர்கள் மா கா பா ஆனந்த், பாலசரவணன் என சுற்றி வருகிறார். தர லோக்கல் ஹீரோ, டாப் க்ளாஸ் தாராவை (ஷில்பா மஞ்சுநாத்) சந்திக்கும் இடம் தொடங்கி பட நம்மை கவர்கிறது. வழக்கம் போல மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் சமாச்சாரம் தான் என்றாலும் அழகான படப்பிடிப்பு நமக்கு நல்ல பீல் தருகிறது.

banner-irir
ஹீரோவின் சிறு வயது பிளாஷ் பேக், ஹீரோயினின் மெத்தனமான சூப்பர் கூல் சிந்தனை, காதலின் வலியில் ஹரிஷ் கல்யாண் என செல்கிறது இரண்டாம் பாதி. இறுதியில் இந்த ஜோடி எடுத்த முடிவு என்ன என்பதுடன் முடிகிறது படம்.
பிளஸ்
ஹரிஷ் கல்யாண், இசை, ஒளிப்பதிவு , வசனங்கள், பாடல்கள்.
மைனஸ்
இரண்டாம் பாதி ஓடும் நேரம், ஏற்கனவே பார்த்த பல படங்களின் தாக்கம் பல சீன்களில்.
சினிமாபேட்டை அலசல்
இன்றைய இளசுகள் தான் இவங்க டார்கெட். பேமிலி ஆடியன்ஸ், குழைந்தைகள் பார்ப்பார்களா என்பது பெரிய கேள்வி குறி தான். எனினும் இன்றைய மாடர்ன் பெண்ணின் மன ஓட்டத்தை தன் ஹீரோயின் கதாபாத்திரத்தில் வைத்த இயக்குனருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
பாஸ், ஜி, என்று பேசிவந்த காலேஜ் பசங்க இனிமே குமாரு என்பதனையும் பயன் படுத்த ஆரம்பித்துவிடுவார். சூப்பர் ஆன முதல் பாதி, ஆவெரேஜ் ஆன இரண்டாம் பாதி என்றே சொல்ல தோன்றுகிறது.

Ranjith Jeyakodi
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் சிவபானம் காட்சிகள் பெரிய நெருடல் தான். எனினும் இன்றைய தேதியில் காதல் தோல்வியில் வாலிபர்கள் எடுக்கும் முடிவு, அவர்களின் மனநிலை, அதனை தடுக்கும் வகையில் காதல் என்ன செய்யும் என காமித்ததற்கு ஸ்பெஷல் க்ளாப்ஸ்.
சினிமாபேட்டை வெர்டிக்ட்
நம்மையும் திரையின் உள்ள அழைத்து செல்லும் ஒளிப்பதிவாளர் கவின் ராஜ் மற்றும் இசையமைப்பாளர் சாம் சி எஸ் இவர்களுக்காவே இப்படத்தை பார்க்கலாம் என்றே சொல்லத்தோன்றுகிறது.
ஆகமொத்தத்தில் இன்றைய தேதிக்கு தேவையான கருத்தை பதிவிட்ட இந்த டீம்முக்கு சினிமாபேட்டை சார்பில் வாழ்த்துக்கள்.
சினிமாபேட்டை ரேட்டிங் 3 / 5
