harish_uthaman
ஹரிஷ் உத்தமன்

வில்லன் நடிகர் தான் என்று இவரை நாம் அடைத்து விட முடியாது. காரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்பது தான் சரியாக பொருந்தும். அந்தளவுக்கு குறுகிய காலத்தில் தனக்கென்று தனி இடம் பிடித்துவிட்டார் ஹரிஷ்.

விஷாலின் பாண்டிய நாடு, ஜெயரம் ரவியுடன் தனி ஒருவன், தளபதி விஜய்யுடன் பைரவா, விஜய் சேதுபதியுடன் றெக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் டோரா, தனுஷின் தொடரி என கலக்கியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர். இவரும் மும்பையை சேர்ந்த செலிபிரிட்டி மேக் அப் ஆர்ட்டிஸ்ட் அம்ரிதா என்பவரும் சில வருடங்களாகவே காதலித்து வந்தனர்.

View this post on Instagram

Meet Amrita @amritakalyanpur… My better half 😍

A post shared by Harish Uthaman (@actorharishuthaman) on

இந்நிலையில் இம்மாதம் குருவாயூர் கோவிலில் மிக எளிமையாக இவர் திருமணம் நடந்ததாம்.

Harish Uthaman – Amritha

சில நாட்களாகவே இந்த ஜோடியின் போட்டோ சமூகவலைத்தளங்களில் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

நடிக்க வருவதற்கு முன் ஹரிஷ் முன்னணி விமான சேவை நிறுவங்களின் கேபின் குழுவில் 6 ஆண்டுகள் பணியாற்றியவர்.

அதிகம் படித்தவை:  திருமண நிகழ்வில் சோகம்: மேற்கூரை இடிந்து விழுந்து 9 பேர் பலி