கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண்.. ஐந்தே நாளில் கோடிகளை வாரிசுருட்டிய லப்பர் பந்து

Lubber Pandhu Collection: கடந்த வாரம் மட்டுமே தமிழில் ஏழு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இதில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நந்தன், அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் கூட்டணியின் லப்பர் பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிலும் லப்பர் பந்து முதல் நாளில் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்த நாட்களில் நல்ல விமர்சனங்களும் கிடைத்து வருகிறது. படத்தை பார்த்த பலரும் எதார்த்தமான கதையையும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.

அதேபோல் ஹரிஷ் கல்யாண் இப்படத்தின் மூலம் அடுத்த வெற்றியையும் பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில் படம் வெளியான முதல் நாளில் இதன் வசூல் என்று பார்க்கையில் 75 லட்சம் மட்டுமே இருந்தது.

ஆனால் இரண்டாவது நாளில் அது அப்படியே 1.65 கோடியாக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து மூன்றாவது நாளில் 2.15 கோடியும் நான்காவது நாளில் 1.1 கோடியும் வசூலாகி இருந்தது. அதைத்தொடர்ந்து ஐந்தாவது நாளான நேற்று 1.20 கோடி வசூலாகி உள்ளது.

லப்பர் பந்து ஐந்தாம் நாள் வசூல்

ஆக மொத்தம் ஐந்து நாட்களில் இப்படம் 7 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது. இந்த வாரம் கார்த்தியின் மெய்யழகன் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் ஆகிய படங்கள் வெளியாகிறது. இருந்தாலும் லப்பர் பந்து அதற்கு டஃப் கொடுக்கும் என இந்த வசூலின் மூலம் தெரிகிறது.

மேலும் இந்த வருடம் கிரிக்கெட் தொடர்பான பல படங்கள் வெளியாகி இருந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அப்படம் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் சோடை போனது.

அதிலும் அதன் ஐந்தாவது நாள் வசூல் என்று பார்க்கையில் 1.15 கோடியாக இருந்தது ஆனால் லப்பர் பந்து ஐந்தாவது நாளில் அந்த வசூலையே ஓரம் கட்டி கெத்து காட்டியுள்ளது. இதை இப்போது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

நாளுக்கு நாள் உயரும் லப்பர் பந்து வசூல்

- Advertisement -spot_img

Trending News