Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நேற்று தளபதி ரஜினி, இன்று சிகப்பு ரோஜாக்கள் கமல்! வைரலாகுது ஹரிஷ் கல்யாணின் ஸ்டார் இரண்டாவது போஸ்டர்

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் பியார் பிரேமா காதல். இளசுகளை வெகுவாக கவர்ந்த படம். யுவன் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஹரிஷ் மற்றும் ரைசா இருவரின் கெமிஸ்ட்ரி செமையாக இருக்கும். இளம் இயக்குனர் இலன் எழுதி இயக்கிய படம்.

மீண்டும் யுவன், ஹரிஷ் மற்றும் இலன் கூட்டணி இணைந்தது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். படத்திற்கு ஸ்டார் என பெயர் வைத்துள்ளனர்.  நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர்கள் வெளியானது.

தளபதி படத்தில் வந்த ரஜினியின் கெட் அப் போன்ற லுக்கில் வெளியான போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றன. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று இரண்டாவது லுக் போஸ்டர் வெளிவந்துள்ளன. சிகப்பு ரோஜாக்கள் கமல் கெட்டப்பில் உள்ளார் ஹரிஷ் .

harish kalyan in star poster

Continue Reading
To Top