தமிழ் நாட்டில் தற்போதைய லேட்டஸ்ட் சென்சேஷன் என்றாலே அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் தான். இந்நிகழ்ச்சிக்கு பின் அவர்கள் வேற லெவெலுக்கு சென்று விட்டார்கள் என்றால் அது மிகையாகாது. நிகழ்ச்சி முடிந்த பிறகு  பல போட்டியாளர்கள் அவர்களின் சோசியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவ்வாக செயல் பட ஆரம்பித்துள்ளனர்.பல இளம் பெண்கள் இந்நிகழ்ச்சியை பார்க்க முக்கிய காரணம் யார்  என்றால் ஆரவ் மற்றும் ஹரிஷ் கல்யாண் தான்.

சிந்து சமவெளி படத்தில் அறிமுகம் ஆகியிருந்தாலும் , இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது என்றால் சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு போன்ற படங்கள் தான். மனிதர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு எது செய்தாலும் அது வைரலாகி விடுகிறது.

ஹரிஷ் கல்யாண் ரைஸாவுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

harish-kalyan-and-raizas

இந்நிலையில் இன்று  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இவர்   ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.

அந்த போட்டோக்களை தன் ட்விட்டர் பக்கத்தில் அப்லோட் செய்துள்ளார்.

Harish Kalyan

……………………………….

Harish Kalyan Christmas Celebration