புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

லப்பர் பந்து வெற்றியால் கூடிய மவுசு.. ஹரிஷ் கல்யாண் காட்டில் அடை மழை தான்

Harish Kalyan: வளர்ந்து வரும் நடிகர்களில் ஹரிஷ் கல்யாண் தற்போது பிஸியான நடிகராக மாறி இருக்கிறார். பார்க்கிங் படத்தை தொடர்ந்து சமீபத்தில் அவர் நடித்த லப்பர் பந்து படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

அதை அடுத்து அவர் நடிப்பில் நூறு கோடி வானவில், டீசல் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயார் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் கவின் நடித்த லிப்ட் பட இயக்குனருடன் ஹரிஷ் கல்யாண் இணைந்துள்ளார்.

வினித் வரப்பிரசாத் இயக்கும் இப்படத்தில் ஸ்டார் படத்தின் ஹீரோயின் ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது.

சம்பள விஷயத்தில் ஆச்சரியப்படுத்தும் ஹரிஷ் கல்யாண்

பொதுவாக ஹீரோக்கள் ஒரு படம் வெற்றி அடைந்து விட்டாலே சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி விடுவார்கள். ஆனால் ஹரிஷ் கல்யாணுக்கு அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெற்றி பெற்றும் கூட சம்பளத்தை மிக குறைவாகவே உயர்த்தி இருக்கிறாராம்.

இது நிச்சயம் வரவேற்கப்படக்கூடிய விஷயம்தான். ஏனென்றால் ஹீரோக்கள் பட்ஜெட்டில் பாதியை சம்பளமாக வாங்கி விட்டால் மற்ற கலைஞர்களுக்கான சம்பளம் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால் போட்டதை விட அதிக பட்ஜெட் தயாரிப்பாளர் தலையில் விடியும்.

இதுதான் சமீப காலமாக திரையுலகில் இருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹரிஷ் கல்யாண் தயாரிப்பாளர்களின் நிலையை உணர்ந்து கொண்டு சம்பள விஷயத்தில் நாணயத்தோடு இருப்பது பாராட்டப்பட்டு வருகிறது.

- Advertisement -

Trending News