Tamil Cinema News | சினிமா செய்திகள்
லிப் லாக் நாயகனுடன் ஜோடி சேர்ந்த பிரியா பவானி சங்கர்.. இந்த படத்தில் எத்தனை இருக்கோ?
தமிழ் சினிமாவின் ரீமேக் படங்களின் வரவு தற்போதுதான் குறைவாக உள்ளது. ஒரு காலத்தில் விஜய், அஜித் போன்றோர் கூட பல ரீமேக் படங்களில் தொடர்ந்து நடித்து உள்ளனர்.
அந்த வகையில் சமீபகாலமாக தனது படங்களில் லிப் லாக் காட்சிகளில் அதிகமாக நடிக்கும் நாயகன் என்றால் அது ஹரிஷ் கல்யாண் தான். அவருடன் தற்போது பிரியா பவானி சங்கர் சேர்ந்து நடிக்கும் செய்திதான் கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்.
குடும்ப குத்து விளக்காக இருந்த ப்ரியா பவானி சங்கர், ஹரீஷ் கல்யாண் உடன் இணைந்து இருப்பதால், என்னென்ன கலவரங்கள் நடக்கப் போகிறதோ என பிரியாவின் ரசிகர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுள்ளனர்.
சரி யாரோட ரீமேக் படம் என்று தெலுங்கு பக்கம் பார்த்தால் அங்கு லிப் லாக் மாஸ்டராக இருக்கும் விஜய்தேவரகொண்டா-வின் பெல்லி சூபுளு என்ற படம்தான். இந்தப் படம் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
