Connect with us

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘தாராள பிரபு’ படத்தின் (ஏடாகூட) கதை இது தான். அட தமிழ் சினிமாவுக்கு புதுசா இருக்கே ..

ஹரிஷ் கல்யாண “தனுசு ராசி நேயர்களே” படத்தில் ரியா சக்ரபோர்த்திக்கு ஜோடியாக நடித்துவருகிறார். சஞ்சய் பாரதி இந்தப் படத்தை இயக்குகிறார்.

ஹரிஷ் பாலிவுட்டில் வெற்றி பெற்ற விக்கி டோனர் (Vicky Donor) படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். ஆயுஷ்மான் குராரா நடித்த இப்படத்தை தமிழில் கிருஷ்ணா மாரிமுத்து (யுத்தம் சரணம் என்ற படத்தின் மூலம் இவர் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்) இயக்குகிறார்.

sperm donation (விந்து தானம்) அடிப்படையாகக் கொண்டு ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவான படம் விக்கி டோனர்.

கதை – தன் அம்மாவுடன் வசித்து வரும் ஹீரோ, மருத்துவர் ஒருவரின் ஐடியா பேரில் விந்தணு விற்று நிறைய பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். இடையே காதல், கல்யாணம் என செல்கிறது கதை. தன் நண்பர்கள், அம்மா, மனைவி என யாரிடமும் இந்த விந்தணு தானம் பற்றி சொல்லாமல் மறைத்துவிடுகிறார்.

ஹீரோவின் மனைவி கருத்தரிக்க இயலாமல் போக, அந்த மருத்துவரின் உதவியுடன் எவ்வாறு தன் மனைவியுடன் மீண்டும் சேர்ந்தார்; இவர்களுக்கு குழந்தை எவ்வாறு கிடைக்கிறது என்பதுடன் முடிகிறது படம்.

அந்த முக்கியமான மருத்துவர் ரோலில் விவேக் நடிக்கிறார் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top