விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹரிப்ரியா. இதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவளே தொடரின் மூலம் ஹரிப்பிரியா மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து ஹரிப்ரியா பல தொடர்களில் நடித்து வந்தார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கண்மணி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹரிப்ரியா நடித்து வருகிறார். வாணி ராணி தொடரில் மூலம் பிரபலமான விக்னேஷ்குமாரை கடந்த 2012ல் ஹரிப்ரியா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
ஹரிப்பிரியா மற்றும் விக்னேஷ் இருவரும் அடிக்கடி இணைந்து செய்த டிக் டாக், டப்ஸ்மாஷ் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்று இருந்தது. அதன் பின்பு இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் ஹரிபிரியாவுக்கும், பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகர் அசார் என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாகவே இவர்களது விவாகரத்து நடைபெற்றதாக இணையத்தில் செய்தி வெளியானது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் ஒரே தொடரில் இணைந்து நடித்து வந்தனர்.
இந்நிலையில் ஹரிப்பிரியா தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில் இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார். எங்களுக்கு எந்த ஜாதி, மதம், எதிர்பார்ப்பு என எதுவும் இல்லை. ஒரு பெண்ணின் வெற்றிக்கு காரணமாக ஒரு ஆண் இருப்பான். அவர் என் காதலனோ, கணவரோ கிடையாது. மகிழ்ச்சியுடன் பேசுவது என்னுடைய பிறப்புரிமை.

இதனால் தவறு என் மேல் இல்லை, அதை தவறாக பார்ப்பவர்கள் மேல் தான் உள்ளது என ஹரிப்ரியா பதிவிட்டுள்ளார். இதனால் ஹரிப்பிரியா மற்றும் அசார் நட்பாகத்தான் பழகி வருவதாக ஹரிப்பிரியா கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவிவரும் இந்த செய்திக்கு ஹரிப்ரியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.