Tamil Cinema News | சினிமா செய்திகள்
கழட்டிவிட்ட சூர்யா.. கடுப்பில் அவசர அவசரமாக பிரபல நடிகருடன் கூட்டணி போட்ட ஹரி!
சூர்யாவின் சினிமா கேரியரில் ஹரிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அதுவும் கமர்சியல் ஹீரோவாக மாறியதற்கு முக்கியமாக ஹரியின் ஆறு, வேல், சிங்கம் போன்ற படங்கள் உறுதுணையாக இருந்தன.
அதிலும் சிங்கம்-2 படம் எல்லாம் வசூலின் உச்சத்துக்கு சென்று இரண்டாம் பாகம் வந்தால் தோல்விதான் பெறும் என்ற சரித்திரத்தை உடைத்து நொறுக்கி வசூல் சாதனை படைத்தது.
ஆனால் சமீபத்தில் சூர்யா-ஹரி கூட்டணியில் வந்த சிங்கம்-3 படம் பெரிய அளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஸ்பீட் இயக்குனர் என பெயர் வைக்கப்பட்டதாலோ என்னமோ படத்தை வேக வேகமாக ஓட்டி தள்ளிவிட்டார்.
இதனால் சூர்யா ரசிகர்கள் கடும் அப்செட் தான். இந்நிலையில் ஹரியும் சூர்யாவும் கொஞ்சம் சறுக்கியதால் எப்படியாவது ஒரு பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்து விட வேண்டும் என அருவா படத்தை கையில் எடுத்தார்கள்.
ஆனால் சூர்யா தற்போது பிசியாக இருப்பதால் ஹரியின் அருவா படத்தை ட்ராப் செய்து விட்டாராம். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என சொல்லியதில் ஹரி தரப்பு மிகவும் அப்செட்.
அது வரைக்கும் சும்மா இருக்க முடியாது என தன்னுடைய மச்சினர் அருண் விஜய் உடன் ஒரு கூட்டணி அமைத்து ஒரு புதிய படத்தை உருவாக்க திட்டம் போட்டுள்ளாராம்.
அருண் விஜய்யின் படங்களுக்கு ஏ சென்டர்களில் மிகப்பெரிய ஓப்பனிங் இருப்பதால் பி & சி சென்டர்களில் ஒரு புதிய மார்க்கெட்டை பிடிக்க ஹரியுடன் களமிறங்கியுள்ளார் அருண் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்பதை சினிமா விகடன் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
