Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யை இயக்க நான் ரெடி, ஆனால் ஒரு விஷயம்…: ஹரி
விஜய்யை இயக்க ஆசை இருந்தாலும் சரியான தயாரிப்பாளருக்காக காத்திருப்பதாக ஹரி தெரிவித்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சி3 படம் நேற்று வெளியானது. படத்தை பார்த்த சூர்யா ரசிகர்கள் மரண மாஸ், தெறிக்கவிட்டோம்ல என்று காலரை தூக்கிவிடுகிறார்கள்.
இந்நிலையில் விஜய்யை இயக்குவது குறித்து ஹரி பிரபல இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
விஜய்யை இயக்க விருப்பம் உள்ளது. விஜய்யை மட்டும் அல்ல அனைத்து ஹீரோக்களுடனும் சேர்ந்து படம் பண்ணும் ஆசை உள்ளது. நானும், விஜய்யும் சேர்ந்து படம் பண்ண விரும்புகிறோம்.
நானும், விஜய்யும் சேர்ந்து பணியாற்ற விரும்பினாலும் சரியான தயாரிப்பாளருக்காக காத்திருக்கிறோம். என்னுடைய மற்றும் விஜய்யின் வேவ்லெந்திற்கு ஏற்ற தயாரிப்பாளரை எதிர்பார்க்கிறோம்.
நானும், விஜய்யும் சேர்ந்து படம் பண்ண தயாரிப்பாளர் மட்டும் அல்ல பிற விஷயங்களும் முக்கியம். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் படம் பண்ணுவோம் என்கிறார் ஹரி.
சூர்யாவை வைத்து சிங்கம் படத்தின் 3 பாகங்களை வெளியிட்டு வெற்றி பார்த்துள்ள ஹரி விஜய்யை வைத்து பரபரவென ஒரு படத்தை எடுக்க வேண்டும் என தளபதி ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
