Tamil Cinema News | சினிமா செய்திகள்
5 படம் ஹிட் கொடுத்த ஹரியையே தூக்கி எறிந்தாரா சூர்யா? சத்தமில்லாமல் நடந்த சண்டையின் காரணம்!
தமிழ் சினிமாவில் ஒரு கூட்டணி இவ்வளவு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்க முடியுமா என அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்கள் சூர்யா மற்றும் ஹரி.
ஆறு படத்தின் மூலம் வெற்றி கணக்கை தொடங்கிய சூர்யா-ஹரி கூட்டணியில் அதன்பிறகு வேல், சிங்கம் ஒன்று, இரண்டு, மூன்று என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சாதனை படைத்தது.
இதில் சிங்கம்3 படம் மட்டும் விமர்சக ரீதியாக பெரிய பெயரை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஹரி விக்ரமை வைத்து சாமி 2 எனும் மொக்கை படத்தை கொடுத்தார்.
ஒரு நாள் ஒரு காட்சி கூட அந்த படம் முழுமையாக ஓட வில்லை என்பதுதான் சோகமான விஷயம். இதனால் ஹரியிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என அனைவரும் நினைத்தனர். இந்நிலையில்தான் உடனடியாக சூர்யா அருவா பட வாய்ப்பு கொடுத்தார்.
ஆனால் கொடுத்த கையுடன் அந்த பட வாய்ப்பை அவரிடம் இருந்து பிடுங்கி விட்டதால் செம கடுப்பில் இருக்கிறாராம் ஹரி. இதனால் அருண் விஜய்யை வைத்து அதே கதையை வெற்றி படமாக மாற்றி காட்டுகிறேன் என சபதம் எடுத்துள்ளாராம்.
சூர்யா, ஹரி கதையில் பல மாற்றங்களைச் செய்யச் சொன்னதாக தெரிகிறது. ஏற்கனவே ஒரே மாதிரி கதையில் நடித்ததுதான் தற்போது தனக்கு தொடர் தோல்விப் படங்கள் கிடைப்பதால் கதையில் வித்தியாசம் இருக்க வேண்டும் என விரும்பி உள்ளாராம்.
கமர்சியல் படத்திற்கு என்ன வித்தியாசம் என்பது எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார் ஹரி. இருந்தாலும் பல மாற்றங்களைச் செய்து கூறிய போதிலும் சூர்யாவின் மனதுக்கு திருப்தி இல்லாததால் அந்த படத்தை கைவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
