ஆஸ்திரேலியாவுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை,4-1 என்று கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதற்கு உறுதுணையாக இருந்தது பரோடாவின் ஹர்டிக் பாண்டியா தான். தொடரில் மொத்தமாக 222 ரன்கள், 6 விக்கெட்டுகள் எடுத்து தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார். மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட ஆரம்பித்து, இன்று இந்திய அணியின் தூணாக இருப்பவர் ஹர்டிக் பாண்டியா.

தற்பொழுது ஹாட்-டாபிக் யார் என்று பார்த்தால் அது நம்ப ஹர்டிக் பாண்டியா தான். மனிதர் என்ன செய்தாலும் அது ட்ரெண்டிங் ஆகி விடுகிறது. சோசியல் மீடியாக்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாகவே இருப்பவர். இவருடைய பெயரில் நிறைய போலி அக்கௌண்டுகளும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு போலி இன்ஸ்டாகிராம் அக்கௌண்டில் தான் ஹர்டிக் பாண்டியா, இப்பெண்ணுடன் இருக்கும் போட்டோ முதன் முதலில் வந்தது.

வந்த சில மணிநேரங்களிலேயே ட்விட்டர், பேஸ் புக், வாட்ஸாப் என்று வைரலாக பரவியது. சில இணையதளங்கள் “யார் இந்த மர்மப் பெண்?” என்று செய்திகள் வெளியிடத் தொடங்கின.

இதற்கு பதிலை ஹர்டிக் பாண்டியா தன் ட்விட்டர் வாயிலாக தந்தார். சிறிதும் பதட்டம் ஆகாமல்” மர்மம முடிச்சு அவிழ்க்கப்பட்டது, அவள் என் தங்கை.” என்ற டீவீட்டை தட்டி விட்டார்.

மனிதர் டென்ஷன் ஆகாமல், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லமால்,மிக கூலாக பதில் போட்ட இந்த ட்வீட் 14,399 லைக்குகளை பெற்றது, மற்றும் இவருடைய ரசிகர்கள் 3,994 முறை ரீ-ட்வீட் செய்தனர்.

இவருடைய மூத்த சகோதரரான க்ருனால் பாண்டியா இவருக்கு ஆதாரவாக ஒரு டீவீட்டை தட்டி விட்டார்  “சிறப்பான போட்டி DNA vs Hardik Pandya , நல்ல முயற்சி; இருந்தாலும் ஆட்டநாயகன் ஹர்டிக் பாண்டியா தான். கொன்னுட்டே ப்ரோ.”

இதற்குமுன் ஹர்டிக் பாண்டியா தொடர் நாயகன் விருது பெற்றதையும், தன் ட்விட்டரில் “இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன், நான் சிறப்பாக விளையாடுவேன், ஒரு கலக்கு கலக்குவேன் என்றாய். இப்பொழுது நான் பெருமையாக சொல்லுவேன் நீ செய்யது விட்டாய், அதுவும் இப்படி” என்று டீவீட்டினார்.

சினிமா பேட்டை கொசுறு நியூஸ்:

க்ருனால் பாண்டியா தன் தம்பி ஐபில் ஆட ஆரம்பித்து ஒரு வருடம் கழித்து தான் மும்பை இந்தியன்ஸ் டீம்மில் விளையாடினார். தம்பி வலது கை பேட்ஸ்மேன், மற்றும் வேக்கப் பந்துவீச்சாளர் என்றால், அண்ணன் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சுழற் பந்து வீச்சாளர். ஆல் ரௌண்டரான இவரும் 6 அடிப்பதில் கெட்டிக்காரர் தான். விரைவில் இந்திய அணியில் இடம் பெற எங்களின் வாழ்த்துக்கள் ப்ரோ.