“அண்ணனிடம் சொன்னதை, செய்து முடித்த தம்பி”-பாண்டியா பிரதர்ஸ்.

தற்பொழுது இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் ஹாட்-டாபிக் யார் என்று பார்த்தால் அது நம்ப ஹர்டிக் பாண்டியா தான். பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என்று மூன்று துறையிலும் அசத்தி வருகிறார்.டெஸ்ட் மாட்ச், ஒரு நாள் போட்டி, டி20 என்று அணைத்து டீமிலும் இடம் பிடித்துவிட்டார்.

பாண்டியா பிரதர்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட ஆரம்பித்து, இன்று இந்திய அணியின் தூணாக இருப்பவர் ஹர்டிக் பாண்டியா. இவருடைய மூத்த சகோதரர் தான் க்ருனால் பாண்டியா. தம்பி  ஆட ஆரம்பித்து ஒரு வருடம் கழித்து தான் இவருக்கு மும்பை இந்தியன்ஸ் ஐபில் டீம்மில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தம்பி வலது கை பேட்ஸ்மேன், மற்றும் வேக்கப் பந்துவீச்சாளர் என்றால், அண்ணன் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சுழற் பந்து வீச்சாளர். ஆல் ரௌண்டரான இருவருமே 6 அடிப்பதில் கெட்டிக்காரர்கள் தான்.

ஆஸி அணியை கலங்கடித்தவர்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது , இதில் இந்தியா 4-1 என்ற கணக்கில்  தொடரை கைப்பற்றி விட்டது. இதற்கு உறுதுணையாக இருந்தது ஹர்டிக் பாண்டியா தான். முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 87/5 என்ற நிலையில் தடுமாறிய பொழுது, தோனியுடன் கூட்டு சேர்ந்து விளையாடினர், அந்த இன்னிங்சில் அதிக பட்சமாக 83 ரன்கள் எடுத்தார். மூன்றாவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணியின் பேட்டிங் கின் பொழுது, இவரை நான்காம் இடத்தில இறங்கிவிட்டனர், அப்பொழுது 78 ரன்கள் எடுத்து இந்தியா ஜெயிக்க காரணமாக இருந்தார். தொடரில் மொத்தமாக 222 ரன்கள், 6 விக்கெட்டுகள் எடுத்து தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

க்ருனால் பாண்டியாவின் ட்வீட்

“இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன், நான் சிறப்பாக விளையாடுவேன், ஒரு கலக்கு கலக்குவேன் என்றாய். இப்பொழுது நான் பெருமையாக சொல்லுவேன் நீ செய்யது விட்டாய், அதுவும் இப்படி” என்ற டீவீட்டுடன் ஹர்டிக் பாண்டியா  இருக்கும் இந்தப்ப புகைப்படத்தையும் அப்லோட் செய்தார்.

உடனே அதற்கு ஹர்டிக் நன்றியும் தெரிவித்தார்.

விராட் கோலியின் கருத்து

கேப்டன் விராட் கோலியிடம் பத்திரிக்கையாளர்கள் ஹர்டிக் பாண்டியா பற்றி கேட்ட பொழுது  ” இந்தத் தொடரின், மிகப் பெரிய கண்டுபிடிப்பு ஹர்டிக் தான். கேப்டன் பொறுப்பில் இருக்கும் பொழுது, அணைத்து நல்ல  வீரர்களில் இருந்து சிறந்த 11 ஐ தேர்ந்தெடுப்பது, சற்று சிரமமான ஒன்று தான். அந்த தலைவலியால் காரியம் எனக்கு பிடித்துள்ளது.” என்று பதில் அளித்தார்.

Comments

comments