Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

மைதானத்தில் சுருண்டு விழுந்த ஹர்திக் பாண்டியா.! அதிர்ச்சியான ரசிகர்கள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், உள்ளிட்ட 6 இந்த தொடரில் பங்கேற்று உள்ளார்கள். இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது, சுமார் 1 வருடங்களுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.

இந்தத் தொடரில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, மைதானத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல் ஹக் மற்றும் பக்கர் சமான் இருவரும் இணைந்து 2 மற்றும் 0 ரன்களில் புவனேஷ்குமார் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக களமிறங்கிய பாபர் அசாம் மற்றும்சோயப் மாலிக் இருவரும் நிதானமாக ஆடி சறுக்கி விழுந்த அணியை தூக்கி நிறுத்தினார் இந்த நிலையில், இந்தியாவின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 17-வது ஓவரை வீசும்பொழுது முதுகு வலியால் சுருண்டு மைதானத்தில் விழுந்தார்.இவர் சுருண்டு விழுந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள் அதன்பின் ஸ்ட்ரெச்சர் கொண்டுவரப்பட்டு அவரை அழைத்துச் சென்றார்கள்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top