Sports | விளையாட்டு
நான் இல்லை அவரே இன்று ஆட்டநாயகன்- வைரலாகுது பாண்டியாவின் பெருந்தன்மையான பேச்சு
இந்திய டீம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ளனர். ஒரு நாள் போட்டிகள் தொடரில் ஒரு ஆறுதல் வெற்றி மட்டுமே பெற்று தொடரை இழந்தனர். டி 20 தொடரின் முதல் போட்டியில் கலக்கல் வெற்றி பெற்றனர்.
இன்று இரண்டாவது போட்டி. டாஸ் வென்று கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். மேத்யூ வேட், ஸ்மித் அபாரமாக ஆடினர். இந்திய அணிக்கு 195 ரன்கள் இலக்கு வைத்தனர். நடராஜன் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். மற்ற அனைத்து பௌலர்களும் ரன்களை வழங்கினர். சூப்பர் பேட்டிங் பிட்ச் இது.
சேஸிங்கில் இந்திய கலக்கினர். இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 எனத் தொடரைக் கைப்பற்றியது. கே.எல்.ராகுல் 22 பந்துகளில் 30 ரன், ஷிகர் தவன் 36 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள், விராட் கோலி வழக்கமான அதிரடி பாணியில் 24 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி விளாசி 40 ரன்கள் விளாசினார்.
எனினும் இறுதியில் 3 ஓவர்களில் 37 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹார்திக் பாண்டியா, ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங் செய்தனர். ஆடம் ஜம்பா வீசிய 18ஆவது ஓவரில் 12 ரன்களும், ஆண்ட்ரு டையின் 19ஆவது ஓவரில் 11 ரன்களும் பறந்தது. இறுதி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டேனியில் சாம்ஸ் வீச, ஹார்திக் பாண்டியா இரண்டு சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 22 பாலில் 42 எடுத்த பாண்டியா ஆட்டநாயகன் விருதை பெற்றார். அவர் விருதை பெரும் பொழுது பின்வருமாறு பேசினார்..
“எப்பொழதுமே ரொம்ப சிம்பிள், ஸ்கோர் போர்ட் பார்த்து விளையாடுவேன். அது நமக்கு எந்த ஷாட்ஸ் ஆடவேண்டும் என புரிய வைக்கும். டி 20 யிலும் அதிக அவகாசம் இருக்கும் என்பதனை நான் உணர்ந்துள்ளேன். கடைசி ஐந்து ஓவரில் 90, 100 எடுக்க முடியும். பழைய போட்டிகளில் இருந்து அந்த நம்பிக்கை என்னிடம் உள்ளது. குழுவாக பாசிட்டிவ் கிரிக்கெட் ஆடுவோம், அனைவருக்கும் வாய்ப்பு அமைகிறது. நான் நடராஜனுக்கு தான் ஆட்டநாயகன் விரித்து கிடைக்கும் என நினைத்தேன், அவரது பந்துவீச்சால் தான் நாங்கள் சேஸ் செய்த டார்கெட்டில் 10 ரன்கள் குறைவாக இருந்தது.” என சொல்லி முடித்தார்.

Natarajan-cinemapettai
சென்ற டி 20 தான் நடராஜனின் அறிமுக போட்டி, அதிலும் மூன்று விக்கெட்டுகள் எடுத்தார் 30 ரன் கொடுத்து. எனினும் ஜடேஜாவுக்கு மாற்றாக வந்த யுவேந்திர சாஹல் 4 ஓவரில் 25 ரன் கொடுத்து, 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். இன்று தெறி பேட்டிங் ஆடி பாண்டியா வாங்கியுள்ளார். அடுத்த போட்டியில் நட்டு வாங்க மொத்த தமிழகமும் வைட்டிங் தான்.
