இன்று சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில்  ஹாட்ரிக் சிக்சர் அடிப்பதில் ஹாட்ரிக் சாதனை படைத்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 20-ஓவர் போட்டிகளில் விளையாடுதவற்காக இந்தியா வருகை தந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டி, இன்று சென்னையில் துவங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இதில் இந்திய அணியின் முதலில் இறங்கிய வீரர்கள் சொதப்ப, தோனி, பாண்டியா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. குறிப்பாக பாண்டியா, வழக்கம்போல் அதிரடியாக விளையாடினார். முதலில் சுழற்பந்து வீச்சாளர் ஜம்பாவை குறிவைத்த பாண்டியா, ஹாட்ரிக் சிக்சர் விளாசினார்.

What happens when Hardik Pandya goes into BOOM BOOM mode? Chennai got a taste of it in one over #TeamIndia #INDvAUS

Posted by Indian Cricket Team on Sunday, September 17, 2017

இதன் மூலம் ஒருநாள் அரங்கில் மூன்று முறை ஹாட்ரிக் சிக்சர் விலாசி புதிய சாதனை படைத்தார்.தவிர, இந்த ஆண்டில் மட்டும் பாண்டியா அடித்த 4வது முறையாக ஹாட்ரிக் சிக்சர் அடித்து சாதித்தார்.

இதன் முலம் சுமார் 16 ஆண்டுகளுக்கு பின் ஹாட்ரிக் சிக்சர் விளாசிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார் பாண்டியா.முன்னதாக கடந்த 2000ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்தியாவின் ஜாகிர் கான் ஹாட்ரிக் சிக்சர் அடித்தார். அதன் பின் இந்த மைல்கல்லை எட்டிய ஒரே வீரர் பாண்டியா தான்.

இதற்கு முன் பாண்டியா பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு முறை (இமாத் வாசிம், ஷதாப் கான்) என இரண்டு முறை ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் சிக்சர் விளாசினார்.