Tamil Cinema News | சினிமா செய்திகள்
நிச்சயதார்த்த மோதிரம், முத்தத்தின் போட்டோவை பகிர்ந்த ஹர்டிக் பாண்டியா
ஹர்டிக் பாண்டியா பரோடாவிற்கு உள்ளூர் போட்டிகளில் ஆட ஆரம்பித்து, மும்பை இந்தியன்ஸுக்காக ஐபில் விளையாடி, இந்திய அணியில் இடம் பிடித்தவர் ஹர்டிக் பாண்டியா. பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என்று மூன்று துறையிலும் அசத்துபவர். சில மாதங்களுக்கு முன்பு கடும் முதுகு வலியால் அவதிப்பட்டார். அதனைத் தொடர்ந்து முதுகு வலிக்கு அறுவை சிகிச்சை முடித்து முழு பிட்னெஸ் நோக்கி உழைத்து வருகிறார்.
முன்பே கிசுகிசுக்கப்பட்ட சமாச்சாரம் தான், நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் உடனான காதல். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு தங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆனதை இந்த ஜோடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

engaged
செர்ஃபியன் நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக் தமிழில் ‘அரிமா நம்பி’ படத்தில் ‘நான் உன்னில் பாதி’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். சில பாலிவுட் படங்களிலும் தோன்றியுள்ளார். ‘பிக் பாஸ் 8’ நிகழ்ச்சியின் மூலமாகத் தான் பிரபலமானார் என்றால் அது மிகையாகாது.
