Connect with us

Cinemapettai

hardik

Sports | விளையாட்டு

ஹர்டிக் பாண்டியா வின் தற்போதைய நிலைமையை பார்த்தீர்களா? வீடியோ

கபில் தேவுக்கு பிறகு இந்திய அணியில் ஒரு ஆல் ரவுண்டர் இல்லை என்ற குறையை தீர்த்து வைத்தவர் ஹர்டிக் பண்டியா. இவரது துடிப்பான பில்டிங், ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் துல்லியமான பந்துவீச்சு என ரவுண்டு கட்டி அடித்தவர். ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி சார்பில் விளையாடிய ஹர்டிக் பாண்டியா நேரடியாக இந்திய அணியில் அடியெடுத்து வைத்தார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவர் இந்திய அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக உருவெடுத்தார். எனினும் அவ்வப்போது காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டு வருகிறார். இதனால் தன்னுடைய பழைய நிலையான ஆட்டத்தை தொடர முடியாமல் தவித்து வருகிறார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20ஓவர் தொடரில் நீண்ட நாட்களுக்கு பிறகு வாய்ப்பளிக்கப்பட்டது. இருந்தும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஹர்திக் பாண்டியா, சோதனையின் உச்சமாக காலில் காயம் ஏற்பட்டு டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.

தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் காயத்திலிருந்து மீண்டு வரும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இதனை இந்திய ரசிகர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

வீடியோ :

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top