Sports | விளையாட்டு
ஹர்திக் பாண்டியா சிகிச்சை முடிந்து காட்டுத்தனமான ஆட்டம்.. 39 பந்தில் 105 ரன் அடிச்ச வைரல் வீடியோ
கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து சிறிது நாட்கள் ஓய்வில் இருந்த ஹர்டிக் பாண்டி சிகிச்சைக்குப்பின் முதல்முறையாக மும்பையில் நடந்த வரும் டி-20 DYPatilCup2020 போட்டியில் 39 பந்துகளில் 105 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது 7.8 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி யூ டியூபில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வரும் இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முன்று ஒருநாள் போட்டிகளில் நடக்க உள்ளது.
இதில் கண்டிப்பாக ஹர்டிக் பாண்டி இருக்க வேண்டும் என்பதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அழுத்தமாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த போட்டியில் அவர் அடித்த சதம் கண்டிப்பாக கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் 10 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமான லைக் மட்டும் ஷேர் செய்து வருகின்றனர்.
