fbpx
Connect with us

Cinemapettai

ஹர்பஜன் பதிவிட்ட மொபைல் போட்டோ! அதில் எங்க தல பாருங்க என கொண்டாடடும் அஜித் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹர்பஜன் பதிவிட்ட மொபைல் போட்டோ! அதில் எங்க தல பாருங்க என கொண்டாடடும் அஜித் ரசிகர்கள்

ஹர்பஜன் சிங்  கிண்டலாக பதிவிட்ட போட்டோ இந்தளவுக்கு இணையத்தில் வைரலாகும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் டீமுக்கு ஆட ஆரம்பித்ததில் இருந்து ஹர்பஜன் சிங்குக்கு தமிழ் புலவர் என்ற பெயர் ஒட்டிக்கொண்டது. அதற்கு முக்கிய காரணம் அவர் ட்விட்டரில் பதிவிடும் தமிழ் பன்ச் வசன ஸ்டேட்டஸ் தான் காரணம்.

ஐபிஎல் க்கு பின் அவருக்கென தனி ரசிகர் வட்டம் ட்விட்டரில் உள்ளது. இவரது இந்த ரீச் தமிழ் சினிமாவில் தோன்றும் அளவுக்கு ஹர்பஜனை பிரபலமாக்கி விட்டுவிட்டது. மனிதர் கொரானா தொற்று காரணமாக இந்த சீசன் விளையாட வில்லை.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தற்போது பதிவிட்டுள்ள ட்வீட்டை அஜித் ரசிகர்கள் வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர்.

ஹோட்டலில் மதிய சாப்பாடு, சாப்பிடும் தட்டில் மொபைல் வைப்பதற்கு தனி இடம் இருக்கு என கிண்டலாய் புகைப்படத்தை பகிர்ந்தார் ஹர்பஜன் சிங். சாப்பிட்டு கொண்டே மொபைல் போனை பயன்படுத்த ஒருவர் செய்த ஐடியாவே இது. எனவே புகைப்படத்தை பதிவிட்ட ஹர்பஜன் மார்டன் தட்டு என்று தெரிவித்திருந்தார். பலரும் வேடிக்கையாக, சிரிப்பு வருவது போன்று, கிண்டல் செய்து என கருத்து பதிவிட்டு வந்தனர்.

harbajan about meals plate

ஆனால் அந்த மொபைலில் அஜித்தின் விஸ்வாச பட ஸ்டில் உடன் எதோ நியூஸ் பகிரப்பட்ட பேஜ் ஓப்பனில் உள்ளது. இதை கவனித்த அஜித் ரசிகர்கள் அந்த போட்டோவை ஜூம் செய்து பகிர்கின்றனர்.

ajith fans reply

வலிமை அப்டேட்டுக்கு காத்திருந்த அஜித் ரசிகர்கள் ஹர்பஜனின் இந்த ட்வீட்டை வைரல் ஆக்கிவிட்டனர்.

Continue Reading
To Top