Sports | விளையாட்டு
இந்தியாவின் டிவில்லேர்ஸ் என ஹர்பஜன் புகழும் வீரர் யார் தெரியுமா ?
கொரானாவின் தொற்று காரணமாக இம்முறை தாமதமாக தொடங்கிய ஐபிஎல் 2020 UAE யில் நடந்து முடிந்துவிட்டது.மும்பை வழக்கம் போல கோப்பையை தட்டி சென்றது. ஐபிஎல் முடிந்த பின் வீரர்கள் ஆஸ்திரேலிய சுற்று பயணம் புறப்பட்டு விட்டனர். சீசன் முடிந்த பின்பும் கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள், ஆலோசகர்கள் பலரும் வீர்கள் மற்றும் டீம்கள் பற்றி தங்களின் கருத்துக்களை சொல்லிய வண்ணமே உள்ளனர்.
அந்த வகையில் இந்தியாவின் சீனியர் ஆப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், இந்திய வீரர் ஒருவரை தென் ஆப்பிரிக்காவின் ஏ பி டிவில்லேர்ஸ் உடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். சூர்ய குமார் யாதவ் தான் அவர். டீம் செலெக்ஷனில் சூர்ய குமார் யாதவ் இடம் பெறாதது பெரிய விவாத பொருள் ஆகியுள்ளது.
“எந்த சந்தேகமும் இல்லை சூரியகுமார் யாதவ் ஆட்டத்தின் போக்கை மற்றும் ஒரு வீரர் என்ற நிலையில் இருந்து தனி ஆளாக போட்டியை ஜெயித்துக்கொடுக்கும் வீரராக மும்பை இந்தியன்ஸ் டீமுக்கு மாறியுள்ளார். சமீபகாலமாக அதிக பொறுப்புணர்ச்சியுடன் ஆடி வருகிறார். முதல் பந்தில் இருந்து அடித்து ஆடக்கூடிய வீரர், அவரின் ஸ்ட்ரைக் ரேட் 100 க்கு மேல் உள்ளது.
அணைத்து வித ஷாட்களும் ஆடுகிறார், எனவே அவரை ரன்எடுக்க விடாமல் கட்டுப்படுத்துவது கடினம். கவர் திசையில் அடிக்கிறார், ஸ்வீப் செய்கிறார், ஸ்பின் ஆடுகிறார், வேகப்பந்துவீச்சு அசத்தலாக எதிர் நின்று ஆடுகிறார். அவர் தான் இந்தியாவின் ஏ பி டிவில்லேர்ஸ்.
இந்திய டீம்மில் சேர்க்கப்பட்டு இருக்கவேண்டும். அவ்வாறு நடக்கவில்லை, எனினும் விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும். அசாத்திய திறமை உடைய வீரர். தன் பேட்டிங் வாயிலாக அனைவரயும் தன் திசை நோக்கி பார்க்கவைத்துள்ளார்.” என கூறியுள்ளார்.

surya kumar yadav
30 வயதாகும் சூர்யா இந்திய டீம்மின் பினிஷர் ரோலுக்கு ஏற்றவர் என்பது பலரது கருத்தாக உள்ளது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
