முதல் முறையாக தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ள ஹர்பஜன்சிங் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிக் பாஸ் லாஸ்லியா நடித்து வருகிறார். காமெடி கதாபாத்திரத்தில் சதீஷ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதனை பார்த்து ஹர்பஜன்சிங் வழக்கம் போல் தனது தமிழ் கவிதையில் வரவேற்றுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் மெய்சிலிர்த்துப் போனார்கள். தற்போது இதனை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
புது மாப்பிள்ளை சதீஷ் எப்பிடி இருக்கீங்க. தம்பி நல்லா சிரிச்ச முகம்.பாக்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க.படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்.நல்லா நெருக்கி செய்வோம் பிரண்ட்ஷிப்.

ஒரே நேரத்தில் ஹர்பஜன்சிங் சந்தானத்துடன் ‘டிக்கிலோனா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
