மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆடுகளத்தை மோசமாக பராமரித்த வான்கடே மைதானத்தின் பராமரிப்பாளரை மும்பை அணி, ஹர்பஜன் படுமோசமாக வசைபாடியுள்ளார்.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் மும்பையில் நடக்கும் 51வது லீக் போட்டியில், பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, மும்பை பவுலர்களின் பந்துவீச்சை பதம் பார்க்க, அந்த அணி, 20 ஓவரில், 230 ரன்கள் குவித்தது. இதற்கு மோசமான ஆடுகளம் தான் காரணம் என ஆடுகள பராமரிப்பாளரை, ஹர்பஜன் சிங் வசைபாடியுள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் கூறுகையில்,’ பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின் முடிவில், ஆடுகள பராமரிபாளர்க்கே ஆட்டநாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும். 40 ஓவரில் 460 ரன்கள் எடுக்கும் அளவுக்கு பராமரித்துள்ளார். இதன் மூலம் பவுலர்களுக்கு வேலையை குறைத்துள்ளார். ‘ என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  இந்தியா யூ-19 அணியில் இடம் பிடித்தார் அர்ஜுன் டெண்டுல்கர் !