ஜெட் ஏர்வெஸ் நிறுவனத்தின் விமானி ஒருவர் இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் இன்று தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில்  “ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானியான பெர்ன்ட் ஹோஸ்லின் என்பவர், சக இந்திய நண்பர் ஒருவரை ‘இந்தியனே, விமானத்தை விட்டு நீ வெளியேறு’ என்றார். அவர் இனவெறி ரீதியில் மட்டும் பேசவில்லை, ஒரு பெண் மற்றும் மாற்றுத்திறனாளியை தாக்கினார்” என்று பதிவிட்டு இதனை இந்திய பிரதமர் மோடிக்கு டேக் செய்துள்ளார்.

மேலும் இதுமாதிரியான இனவெறி செயல்களை  இந்தியாவில் அனுமதிக்க கூடாது என்றும் இதுமாதிரியான செயல்களில் ஈடுபட்டதற்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெட்கப்பட வேண்டும் என்று ஹர்பஜன் பதிவிட்டுள்ளார்.