Videos | வீடியோக்கள்
கலக்கலான ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா, மிரட்டலான அர்ஜுன்.. வைரலாகும் பிரெண்ட்ஷிப் டீசர்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல் முறையாக சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கி உள்ளார். இந்த படத்திற்கு பிரெண்ட்ஷிப் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அவருடன் சேர்ந்து ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நாயகியாக லாஸ்லியா நடிக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற லாஸ்லியா ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் பிரெண்ட்ஷிப் திரைப்படம்.
இந்த படம் மே மாதம் ரிலீசாக வேண்டி இருந்தது. ஆனால் தற்போது சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியீட்டில் மாறுதல் ஏற்பட்டுள்ளன.
நண்பர்கள் தினத்தை முன்னிட்டு பிரெண்ட்ஷிப் படத்திலிருந்து ஒரு சில காட்சிகள் டீஸராக தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரெண்ட்ஷிப் படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகி உள்ளது. டீசரை பார்க்கும் போதே படம் கலகலப்பாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
