Connect with us
Cinemapettai

Cinemapettai

gv-prakash

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷின் சர்ச்சை போஸ்டரை வெளியிட்ட ஹர்பஜன் சிங்.. வைரலாகும் ட்விட்டர் பதிவு

இசையமைப்பாளர்கள் எல்லாம் ஹீரோவாகி கொண்டிருக்கும் நேரத்தில் ஜி.வி.பிரகாஷும் “டார்லிங்” என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அவரது நேரமா என்னமோ அந்த படம் ஹிட்டானது. அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

வருடத்திற்கு குறைந்தது 5 படங்களாவது ரிலீஸ் செய்து வருகிறார். இதில் சில படங்கள் நல்ல கதை தேர்வாகும். பல படங்கள் ஏன்டா நடித்தோம் என்று அவரே பீல் பண்ணும் அளவுக்கு கேவலமான படங்களாகும்.

இருப்பினும் சமீபத்தில் நல்ல கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘நாச்சியார்’ படம், இவருக்கு நன்றாக நடிக்க வரும் என்பதை காட்டியது. இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் இவரது கேரக்டர் பெரிதும் பேசப்படுகிறது.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை அக்ஸஸ் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கிறார். இப்படத்தை புதுமுக இயக்குனர் சதீஷ் செல்வ குமார் இயக்குகிறார்.

இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக ஒரு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கிரிக்கெட் வீரர் வெளியிட்டார். அவர் வேறு யாரும் இல்லை, நமது சி.எஸ்.கே அணியில் தமிழ் புலவராக கொண்டாடப்பட்ட ஹர்பஜன் சிங் தான்.

விட்டா… ஹர்பஜன் சிங் க தமிழ் நாட்டுக்கே கூட்டிட்டு வந்துருவாங்க போல..

gv-prakash-bachelor

gv-prakash-bachelor

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top