ஹர்பஜன் சிங்

இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப் பட்டாலும் மனிதர் இன்னமும் தன் ஒய்வு பற்றி எதுவும் முடிவு எடுக்கவில்லை. ஐபில் போட்டிகளில் ஆடுவது, தன்னுடைய ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனியை ப்ரோமோட் செய்வது, தன் மனைவி கீதா பஸ்ராவுடன் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது என்று பரபரப்பாகவே இருப்பவர்.

Harbhajan Singh

ஐபில்

ஐபில் ஏலத்தில் சிஎஸ்கே அணி ஹர்பஜன் சிங் அவர்களை பேஸ் விலையில் அதாவது 2 கோடியில் எடுத்தது. ஸ்பின் பௌலிங்கில் கிங்காக இருக்கும் இவருக்கு ட்விட்டரில். 5.66 மில்லியன் பாலோயர்ஸ் உள்ளனர் இவருக்கு.

CSK

ஏலம் முடிந்ததும் ஹர்பஜன் தமிழில் ட்வீட் போட்டு அனைவர் கவனத்தையும் கவர்ந்தார். மேலும் மகளிர் தினத்திற்காகவும் தமிழில் அசத்தல் ட்வீட் பதிவிட்டார்.

இந்நிலையில் ஏப்ரல் 7 ஐபில் போட்டிகள் துவங்கவுள்ளது. இதற்காக சென்னை வந்துள்ளார் ஹர்பஜன். இங்கு வந்ததும் மீண்டும் தமிழில் ட்வீட் போட்டு அசத்தியுள்ளார்.

இதனை பலர் லைக் மற்றும் ரீ ட்வீட் செய்து வருகின்றனர்.