Sports | விளையாட்டு
‘முதலில் கரண்ட் பில் கட்டுங்க ஜி’ – யுவராஜ் சிங்கை கலாய்த்த ஹர்பஜன் !
ஹர்பஜன் சிங்
மனிதர் இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடுவதில்லை என்றாலும் பிஸியான ஆசாமி தான். தன் பிஸ்னஸ், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் கம்பெனி, டிவி நிகழ்ச்சி, யூ டுயூப் என்று ஏகத்துக்கு பிஸி. இவர் என்றுமே ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர். அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆட ஆரம்பித்து தமிழில் ட்வீட் செய்ய ஆரம்பித்ததும் இன்னும் அதிகமானது பாலோயர்ஸ் எண்ணிக்கை. தற்பொழுது 8.7 மில்லியன் நபர்கள் உள்ளனர்.
யுவராஜ் சிங்
சமீபத்தில் யுவராஜ் சிங் ட்விட்டரில் ட்வீட் ஒன்றை போட்டார் “ஒரு மணி நேரத்துக்கு மேலாக பாந்த்ரா பகுதியில் கரண்ட் இல்லை, கரண்ட் வருமா ?” என்பதே அது.
சிலர் யுவராஜை கிண்டல் செய்யும் விதமாக பதில் தந்தார்கள், வேறு சிலரோ அட இதான் பா நாம் நிலை என்றெல்லாம் பேசிவந்தார்கள். அதே சமயத்தில் தான் ஹர்பஜன் குறும்பாக “ராஜா முதலில் சரியான நேரத்தில் பில் கட்டணும்.” என்று கிண்டலடித்துள்ளார்.
