Tamil Cinema News | சினிமா செய்திகள்
இன்று 1500 கலோரிகளை எரித்து விட்டேன் ! போட்டோவுடன் பிட்னெஸ் சாலஞ்சை பங்கமாய் கலாய்த்த ஹர்பஜன் !
ஹர்பஜன் சிங்
மனிதர் இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடுவதில்லை என்றாலும் பிஸியான ஆசாமி தான். தன் பிஸ்னஸ், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் கம்பெனி, டிவி நிகழ்ச்சி, யூ டுயூப் என்று ஏகத்துக்கு பிஸி.
சி எஸ் கே
கடந்த சீசன் வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடி வந்தவர் இந்த முறை, சென்னை அணியில் ஆடினார். தமிழில் அடிக்கடி ட்வீட் செய்து ட்விட்டர் செலிபிரிட்டியும் ஆனார். தமிழன் சிங் என்று அழைக்கும் அளவுக்கு அசத்தினார். இவர் ட்விட்டர் கணக்கில் 8 மில்லியனுக்கு மேல் பாலோவர்ஸ் உள்ளனர்.
பிட்னெஸ் சாலஞ்
இன்றைய தேதியில் இந்திய லெவெலில் இது தான் ட்ரெண்டிங். ராஜவர்தன் ராத்தோர் முதன் முதலில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தன் ட்விட்டரில் வெளியிட்டார். அதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, ரித்திக் ரோஷன் மற்றும் சாய்னா நேவால் ஆகியோரை டேக் செய்து அவர்களுக்கு பிட்னஸ் சவால் விடுத்தார். அவரின் சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி தன் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு, மனைவி அனுஷ்கா சர்மா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு சவால் விடுத்தார். கோலியின் பிட்னஸ் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ட்விட்டரில் அறிவித்தார் பிரதமர் மோடி. அதன் பின் இது ட்ரெண்டிங் ஆனது. கிரிக்கெட் உலகம், பேட்மிண்டன், பாலிவுட்டில் படு பிரபலமாக உள்ளது பிட்னஸ் சவால் .
இந்நிலையில் இவர்களை கலாய்க்கும் விதமாக ஹர்பஜன் 1500 கலோரிகள் எரித்து விட்டேன் என்று கூறி ஸ்டேட்டஸ் தட்டினார். உள்ளே ஜிம் ஒர்க் அவுட் வீடியோ இருக்கும் என்று பார்த்தல் ஏமாற்றமே மிஞ்சும்.
இவர் தான் கருகடித்த சமோசாவின் படங்களை வெளியிட்டிருந்தார். இவரின் இந்த நகைச்சுவை உணர்வை பலரையும் இணையத்தில் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
