News | செய்திகள்
வைரலாகுது ஹர்பஜன் (தமிழன்) சிங் பதிவிட்ட மகளிர் தின ட்வீட் !
ஹர்பஜன் சிங்
இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப் பட்டாலும் மனிதர் இன்னமும் தன் ஒய்வு பற்றி எதுவும் முடிவு எடுக்கவில்லை. ஐபில் போட்டிகளில் ஆடுவது, தன்னுடைய ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனியை ப்ரோமோட் செய்வது, தன் மனைவி கீதா பஸ்ராவுடன் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது என்று பரபரப்பாகவே இருப்பவர்.

Harbajansingh_cinemapettai
ஐபில்
ஐபில் ஏலத்தில் ஏலத்தில் சிஎஸ்கே அணி அஸ்வின் அவர்களை பஞ்சாப் அணியிடம் விட்டுக்கொடுத்து . ஹர்பஜன் சிங் இவரை பேஸ் விலையில் அதாவது 2 கோடியில் சென்னை எடுத்துவிட்டது.

Harbhajan Singh
ஸ்பின் பௌலிங்கில் கிங்காக இருக்கும் இவருக்கு ட்விட்டரில். 5 . 66 மில்லியன் பாலோயர்ஸ் உள்ளனர் இவருக்கு.
வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு @ChennaiIPL Happy to be Playing for my new home #WhistlePodu
— Harbhajan Turbanator (@harbhajan_singh) January 27, 2018
ஏலம் முடிந்த உடன் ஹர்பஜன் தமிழில் ட்வீட் போட்டு அனைவர் கவனத்தையும் கவர்ந்தார். அதில் மகிழ்ச்சியோடு விசில் போடு என்றும் டீவீட்டினார்.

இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இவர் தமிழில் மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
அன்னையும் அவளே, சகோதரியும் அவளே, தோழியும் அவளே, மனைவியும் அவளே, மகளும் அவளே, உலகில் உள்ள அணைத்து உறவுகளின் அடிப்படையும் அவளே. பெண்ணாக பிறவி எடுத்த அனைவருக்கும் அன்பு சகோதரனின் மகளீர் தின நல்வாழ்த்துக்கள்
பெண்மையை போற்றுவோம்..— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 8, 2018
இது தற்பொழுது வைரலாகி வருமின்றது.
