Connect with us

Cinemapettai

CSK மற்றும் MI டீம்களுக்குள் உள்ள வித்தியாசம் – ஹர்பஜன் சிங் சொல்லும் விஷயம் இது தான்.

Sports | விளையாட்டு

CSK மற்றும் MI டீம்களுக்குள் உள்ள வித்தியாசம் – ஹர்பஜன் சிங் சொல்லும் விஷயம் இது தான்.

இன்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தனது பழைய டீம் மும்பை இந்தியன்ஸ் உடன் ஒப்பிட்டு ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப் பட்டாலும் மனிதர் இன்னமும் தன் ஒய்வு பற்றி எதுவும் முடிவு எடுக்கவில்லை. ஐபில் போட்டிகளில் ஆடுவது, தன்னுடைய ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனியை ப்ரோமோட் செய்வது, தன் மனைவி கீதா பஸ்ராவுடன் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது, ஹிந்தியில் வர்ணனை செய்வது என்று பிஸியாகவே இருப்பவர்.

மும்பை இந்தியன்ஸ் டீமின் முக்கிய வீரராக இருந்த இவரை, கடந்த சீசன் அந்த டீம் தக்கவைக்கவில்லை. அதுவே பலருக்கு ஆச்சர்யம் என்றால்; சி எஸ் கே நிர்வாகம் இவரை எடுத்து. இத்தனை வருடங்களாக தான் செய்து வந்த பணியை செவ்வனே செய்து வருகிறார். அதுமட்டுமன்றி சென்னை வந்த பின் தமிழ் டீவீட்டில் வேறு கலக்குகிறார்.

harbhajan singh csk

harbhajan singh csk

இந்நிலையில் இரண்டு டீம்களையும் ஒப்பிட்டு சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

”மும்பை இந்தியன்ஸ் டீமின் மீது நான் பெரிய மரியாதை வைத்துள்ளேன். அவர்கள் வழக்கம்போல இந்தாண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மும்பை அணியைப் பொறுத்தவரை வெற்றிபெற வேண்டும் என்ற அழுத்தம் பெரிய  அளவில் இருக்கும். ஆனால், சி எஸ் கேவில் அப்படியல்ல. எதையும்  எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடிய மனநிலை கொண்டது. இங்கு வெற்றி என்பது வாழ்வா சாவா பிரச்னை இல்லை” என தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top