fbpx
Connect with us

Cinemapettai

த்ரில் வெற்றிக்கு பின் தர்பார், படையப்பா ரெபரென்ஸுடன் ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஹர்பஜன், தாஹிர். ரைட்டு ரைட்டு, நடத்து நடத்து !

Sports | விளையாட்டு

த்ரில் வெற்றிக்கு பின் தர்பார், படையப்பா ரெபரென்ஸுடன் ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஹர்பஜன், தாஹிர். ரைட்டு ரைட்டு, நடத்து நடத்து !

நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய லீக் போட்டியில் ஓவரின் கடைசி பாலில் சென்னை அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 152 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்தது. தோனி அவுட் ஆன சமயத்தில் கூட, முதல் பாலில் ஜடேஜா அடித்த சிக்ஸ் மற்றும் ஜெயிக்க மூன்று ரன் தேவை என்ற நிலையில் சான்டனர் அடித்த சிக்ஸரால் சென்னை வெற்றி பெற்றது. 6 – 1(1Nb) – 2 – W- 2 – 2- 1wd- 6.

அந்த ஓவரின் நான்காவது பந்தை ஸ்டோக்ஸ் புல் டாஸாக வீச, இரண்டு ரன் ஓடினர் . முதலில் களத்தில் இருந்த அம்பயர் நோ-பால் என கையை உயர்த்தினார். பின் ஸ்குவையர் லெக் அம்பயர் சைகை எதுவும் வழங்காததால் தன் முடிவை மாற்றினார். இது நோ-பால் இல்லை என்றார். எனவே, நோ பால் திரும்பப் பெறப்பட்டது. இதைக் கண்ட ஜடேஜா அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

CSK VS RR

அப்போது விக்கெட்டை இழந்து வெளியே சென்ற தோனி, பவுண்டரி அருகே இருந்து களத்துக்குள் நுழைந்தார். தோனி எல்லை மீறி அம்பயரிடம் வாக்குவாதம் செய்த காட்சி பெரும் ஆச்சரிய, அதிர்ச்சியாக அமைந்தது. தோனிக்கு தண்டனையாக அவரது மேட்ச் பணத்தில் 50 சதவிகிதம் பைன் போடப்பட்டது.

வழக்கம் போல வெற்றிக்கு பின் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் கெத்தாக ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top