fbpx
Connect with us

Cinemapettai

திருவள்ளுவராக மாறும் சென்னை சூப்பர் கிங்ஸ் புலவர்.. அதுவும் வெப்சீரிஸ்ல மச்சி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திருவள்ளுவராக மாறும் சென்னை சூப்பர் கிங்ஸ் புலவர்.. அதுவும் வெப்சீரிஸ்ல மச்சி

தமிழ் சினிமா தற்போது நடிகர்களையும் தாண்டி கிரிக்கெட் வீரர்களை நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் ஹர்பஜன்சிங் முதன்முறையாக தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார்.

இதற்குக் காரணம் ஐபிஎல் போட்டிகளின்போது அணியை விளம்பரப்படுத்துவதற்காக எடுக்கப்படும் படங்கள் தான். பல கிரிக்கெட் வீரர்கள் விளம்பரத் தூதர்களாக நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல யூட்யூப் சேனலான பிளாக் ஷீப், ஹர்பஜன் சிங்கை திருவள்ளுவர் ஆக வைத்து ஒரு வெப்சீரீஸ் ஒன்றை உருவாக்க உள்ளது. மொத்தம் பத்து எபிசோடுகள் கொண்ட இந்த தொடர் வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது.

இதில் RJ விக்னேஷ்காந்த் மற்றும் அரவிந்த் ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இதனை விளம்பரப்படுத்துவதற்காக நேற்று வடபழனியில் உள்ள மால் ஒன்றில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதன் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

tikkilona-harbajan-singh

tikkilona-harbajan-singh

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top