fbpx
Connect with us

Cinemapettai

18000 லைக்குகள் கடந்து வைரலாகுது விஜய் ஷங்கர் பற்றிய ஹர்பஜன் சிங்கின் ஸ்டேட்டஸ். உலகக்கோப்பையில் நம்பர் நான்கில் ஆட ஏற்றவரோ ?

Sports | விளையாட்டு

18000 லைக்குகள் கடந்து வைரலாகுது விஜய் ஷங்கர் பற்றிய ஹர்பஜன் சிங்கின் ஸ்டேட்டஸ். உலகக்கோப்பையில் நம்பர் நான்கில் ஆட ஏற்றவரோ ?

நேற்றைய போட்டியில் பேட்டிங் , பௌலிங் என இரண்டிலும் அசத்தி விஜய் ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

விஜய் ஷங்கர் VIJAY SHANKAR

மிதவேக பந்துவீச்சாளர் மற்றும் மத்திய வரிசை பாட்ஸ்மான். இந்திய ஏ அணி, ஐபில் மற்றும் ரஞ்சி போட்டிகளில் நன்றாக விளையாடியதன் காரணமாகவே இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. நிதாஸ் கோப்பையில் இவர் ஆட்டம் பலரின் எதிற்மறையான விமர்சனத்துக்கு உள்ளானது .

vijay shankar

பின்னர் ஒரு நாள் போட்டிகளிலும் சேர்க்கப்பட்டார். ஹர்டிக் பாண்டியாவின் காயம் (சாபம் தான்) இவருக்கு வரமாக அமைந்தது. நியூஸிலாந்துடனான போட்டிகள் மற்றும் தற்பொழுது நடக்கும் ஆஸ்திரேலிய தொடரிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நேற்றய நாக்பூர் இரண்டாவது போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட் இழந்து தடுமாறிய சமயத்தில் அதிரடியாக கேப்டன் கோலியுடன் இணைந்து ஆடினார். 41 பந்தில் 44 ரன்கள் ( ஐந்து தரும் ஒரு 6 அடக்கம்) எடுத்தார். துரதிர்ஷ்ட விதமாக ரன் அவுட் ஆனார்.

பின்னர் பந்துவீச்சில் ஒரு ஓவர் வீசி 13 ரன் கொடுத்தார். இந்நிலையில் 50 வைத்து ஓவர் போடும் வாய்ப்பு இவருக்கு அளிக்கப்பட்டது. 6 பந்து 11 ரன் 2 விக்கட் மீதம் இருந்தது. ஜாதவ் அல்லது ஷங்கர் யார் வீசுவார்கள் என்ற குழப்பம் அனைவருக்கும் இருந்தது.

Vijay Shankar

எனினும் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு செல்ல முதல் பாலில் செட் பேட்ஸ்மேன் ஸ்டானிஸ் 52(65) அவர்களை lbw முறையில் அவுட் ஆக்கினார். அதன் பின்னர் அடுத்த பாலில் இரண்டு ரன் கொடுத்தார். பின்னர் ம்மொன்றுவது பாலில் போல்ட் செய்து ஆடம் சம்ப்பா விக்கட்டை வீழ்த்தி இந்தியாவை வெற்றி பெற செய்தார்.

ஹர்பஜன் சிங்

இந்நிலையில் தன் ட்விட்டரில் ஹர்பஜன் சிங் உலகக்கோப்பைக்கான தன் டிக்கெட்டை உறுதி செய்துவிட்டார் விஜய் ஷங்கர் என பதிவிட்டுள்ளார்.

முன்பே தான் வெளியிட்ட உலகக்கோப்பை உத்தேச அணியில் கூட ஹர்டிக் பாண்டியா மற்றும் விஜய் ஷங்கரை சொல்லி இருந்தார் ஹர்பஜன் என்பதும் நாம் அறிந்த விஷயமே.

பலரும் ஹர்பஜனின் கருத்தை ஆமோதித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top