Connect with us
Cinemapettai

Cinemapettai

வெற்றிக்கு பின் விஸ்வாசம் அஜித் ரெபரென்ஸுடன் அலப்பறையாக ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஹர்பஜன் சிங்.

Sports | விளையாட்டு

வெற்றிக்கு பின் விஸ்வாசம் அஜித் ரெபரென்ஸுடன் அலப்பறையாக ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஹர்பஜன் சிங்.

ஐபில் நேற்றயை லீக் போட்டியில் கொல்கத்தா அணியினை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுலபமாக வென்றது.

டாஸ் வென்ற சென்னை அணி, கொல்கத்தாவை முதலில் பேட் செய்ய அழைத்து. சென்னை அணியின் துல்லிய பந்துவீச்சால் கொல்கத்தா ஆரம்பம் முதலே தடுமாறியது. பவர் பிளே சமயத்தில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தாவால் 108 ரன்களையே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ரசல் 50 (44) ரன்களை எடுத்தார். அணியின் ஸ்கோர் 100ஐ கடக்க உதவினார். ஆரம்பத்தில் சாஹர் அசத்த, பின்னர் ஸ்பின் பந்துவீச்சில் ஹர்பஜன்( 4-0-15-2), ஜடேஜா (4-0-17-1) தாஹிர் (4-0-21-2) கலக்கினர்.

பேட்டிங்கில் டூபிளெஸ்ஸி 43 (45) நிதானமாக ஆட அவரை சுற்றி மற்றவர்கள் ரன் எடுக்க நிதானமாக 17.2 ஓவர்களில் மேட்சை வென்றது. 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய சாஹர் ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.

நரேன் மற்றும் சாவ்லா விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் வெற்றிக்கு பின் வழக்கம் போல தமிழில் ட்வீட் பதிவிட்டார்.

எனினும் இம்முறை தாறுமாறு கெத்தாக பதிவிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top