Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

இவர் தான் அடுத்த ஐபில் இல் கோடீஸ்வரன் – ஆருடம் சொல்லும் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங்

இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப் பட்டாலும் மனிதர் இன்னமும் தன் ஒய்வு பற்றி எதுவும் முடிவு எடுக்கவில்லை. ஐபில் போட்டிகளில் ஆடுவது, தன்னுடைய ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனியை ப்ரோமோட் செய்வது, தன் மனைவி கீதா பஸ்ராவுடன் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது, ஹிந்தியில் வர்ணனை செய்வது என்று பிஸியாகவே இருப்பவர்.

Harbajan Singh – Arjun Tendulkar

ஹர்பஜனின் சமூகவலைத்தளமான் ட்விட்டரில் எப்பொழுதும் பிஸியாகவே இருப்பார். ஐபில் சமயத்தில் தமிழில் ட்வீட் போட்டு அசத்தினார். மேலும் பிறந்தநாள் வாழ்த்து சொல்வது. சமுதாயவிழிப்புணர்வு என்று கலக்குவார் ட்விட்டரில்.

Shimron Hetmyer

சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் போட்டி முடிந்ததும் மனிதர் ட்வீட் ஒன்றை தட்டினார். அன்றைய போட்டியில் சதம் ( 78 பாலில் 106 ) அடித்த 21 வயது சிம்ரோன் ஹெட்மயர் பற்றி தான் அவர் கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் சொதப்பினாலும் 13 ஒருநாள் போட்டிகளில் இவர் அடிக்கும் மூன்றாவது சதம். 2014 இல் ஜூனியர் க்ரிக்டர் விருதை பெற்றார். 16 இல் நடந்த யூ 19 கோப்பையின் கேப்டன் என படிப்படியாக முன்னேறியுள்ளார் ஹெட்மயர்.

இவரை போர்டு நிர்வாகம் தக்கவைக்குமா அல்லது, லீக் டி 20 போட்டிகளுக்கு தரை வார்த்துக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top