Sports | விளையாட்டு
சி எஸ் கேவுக்கே லந்தா? மதுர ஸ்லாங்கில் ஹர்பஜன் சவுடால் ட்வீட்!
இரண்டு வருட தடை முடிந்து கேட்டதாக ரி என்ட்ரி கொடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். மும்பையில் இருந்து சென்னை அணிக்கு விளையாடப்போவது உறுதியானத்தில் இருந்தே ட்விட்டரில் ஹர்பஜன் தமிழில் அடிக்கடி ட்வீட் செய்தார். பின்னர் இது ஒரு ட்ரெண்ட் ஆகவே மாறிவிட்டது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றதும், இன்று ஹர்பஜன் கெத்தாக என ஸ்டேட்டஸ் டீவீட்டியுள்ளார் என்று பார்ப்பதற்கே ஒரு கூட்டம் காத்துக்கிடக்கிறார்கள்.
DD vs CSK
நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. வாட்சன் 78 ரன், தோனி 52 ரன், அம்பத்தி ராயூடு 41 ரன் எடுத்ததன் மூலம் 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 211 ரன்கள் எடுத்தது.
சென்னை அணியில் நான்கு மாற்றங்கள் தாஹிருக்கு பதில் நிகிடி, பில்லிங்ஸ்க்கு பதில் டு பிளெஸ்ஸி, காயம் அடைந்த சாஹருக்கு பதில் லெக் ஸ்பின்னர் கரண் சர்மா. மேலும் ஷரத்துல் தாகூருக்கு மாற்றாக கேரளாவின் ஆசிப் இடம் பிடித்தனர்.
டெல்லி அணி சார்பில் ரிஷப் பண்ட் 79 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத விஜய் சங்கர் 54 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியின் வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பகத்தில் பதிவிட்டுள்ள பதிவு.
