பாரபட்சம் எதற்கு? மும்பை வீரரை ஏன் தேர்வு செய்யவில்லை.. கடுப்பான ஹர்பஜன் சிங்

இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப் பட்டாலும் ஹர்பஜன் இன்னமும் தன் ஒய்வு பற்றி எதுவும் முடிவு எடுக்கவில்லை. ஐபில் போட்டிகளில் ஆடுவது, தன்னுடைய ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனியை ப்ரோமோட் செய்வது, ஹிந்தியில் வர்ணனை செய்வது என்று பிஸி. ஹர்பஜனும் ட்விட்டரும் இணைபிரியா சகோதரர்கள் என்றால் அது மிகையாகாது, அந்தளவுக்கு ஆக்டிவாக உள்ளவர். தன் மனதில் பட்ட கருத்துக்களை பதிவிடுவார்.

ஏற்கனவே பல முறை தற்பொழுது உள்ள MSK பிரசாத் தலைமயிலான தேர்வுக்குழு பற்றி பேசியுள்ளார் இவர். சமீபத்தில் கூட விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் ஓரங்கட்ட பட்டதை பற்றி பேசினார்.

இந்நிலையில் மும்பையின் சூர்யா குமார் யாதவிற்கு ஆதரவாக தற்பொழுது ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். தேர்வாளர்கள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டுள்வதாக பதிவிட்டுள்ளார். . சூரியகுமார் என்ன தவறு செய்தார் என தெரியவில்லை. ஐவரும் மற்றவர்களை போல ரன்கள் குவித்து வருகிறார். ஆனால் இந்தியா/ ஏ / பி டீம்களுக்கு கூட தேர்வாகவில்லை. ஒவ்வொரு வீரருக்கு ஒவ்வொரு மாதிரியான கொள்கைகளை கடைபிடித்து வருகிறார்கள் தேர்வுக்குழு என சொல்லியுள்ளார்.

suryakumar

பலரும் ஹர்பஜனின் இந்த கருத்தை ஆமோதித்து வருகின்றனர்.

பிசிசிஐயின் தலைவர் கங்குலி தலையிட்டு என்ன முடிவு செய்வார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Comment