தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அதே மாதம் விஜய் – அட்லி மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.