இரண்டு வருடங்கள் ஓய்வின் பின்னர் தற்போது தல அஜித்தின் நடிப்பில் வெளியாகவிருப்பது தான் விவேகம்.

இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியான அன்றே பலருக்கும் சந்தேகங்கள் அதிகமாக எழுந்தது எனலாம், ஏன் என்றால் அதில் அஜித் சிக்ஸ் பேக் உடம்பில் மிரட்டி இருந்தார்.

இதனை பலர் போட்டோஷாப்பில் வரைந்த உடம்பு, இது பொய்யானது என்றெல்லாம் இணையத்தில் மீம்ஸ் மற்றும் கேலியாகவும் சித்தரித்திருந்தார்கள்.

குறித்த செய்தியானது அஜித்தின் திரைப்பட குழுவினருக்கு சென்றடையவே, ட்ரெய்னர் முதல் லைட்மான் வரை அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தது.

கஷ்டப்பட்டு வரவழைத்த சிக்ஸ் பேக்கை இப்படி கேவலமாக சித்தரிக்கின்றார்களே என்று கூறி காணொளியை வெளியிடலாம் என கூறியதை அஜித் உடனடியாக மறுத்துவிட்டாராம்.

இருந்தாலும் படம் வெளியாவதற்கு முன்னர் அஜித்தின் சிக்ஸ் பேக் வேர்கவுட் செய்த காணொளியை வெளியிட இருக்கிறார்களாம் படக்குழு.

எது எவ்வாறாயினும் படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.