Connect with us
Cinemapettai

Cinemapettai

சிஎஸ்கே அட்மின் தட்டிய ஒரு ட்வீட்! ரெய்னா திரும்ப வந்துட்டான் என கொண்டாடும் ரசிகர்கள்

raina-csk

Sports | விளையாட்டு

சிஎஸ்கே அட்மின் தட்டிய ஒரு ட்வீட்! ரெய்னா திரும்ப வந்துட்டான் என கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் – சர்வதேச டீமுக்கு உள்ள அளவுக்கு விஸ்வாசமான ரசிகர்களை உடைய டீம். ஐபிஎல் இந்தளவுக்கு பிரபலமாக இந்த டீமும் முக்கிய காரணம். தல தோனி, சின்ன தல ரெய்னா, தமிழ் புலவர் ஹராபஜன், பாகுபலி ராயுடு, பராசக்தி எக்ஸ்பிரஸ் தாஹிர் என பல ஜாம்பவான்கள் உடைய டீம்.

இந்த ஆண்டுக்கு முன்பு வரை அணைத்து சீசன்களிலும் பிளே ஆப் ஆடிய டீம். இம்முறை UAE யில் டீம் தகுதி பெறவில்லை. எந்த தடவையும் இல்லாமல் இந்த முறை மிக சுவாரஸ்யமாக சென்றது போட்டிகள். கடைசி நான்கு டீம்கள் முடிவானதே இறுதி கட்டத்தில் தான்.

இந்த சீசன் சென்னை டீம் சொதப்பியத்துக்கு முக்கிய காரணம் சுரேஷ் ரெய்னா விலகியது என அனைவர்க்கும் தெரியும். நம்பர் 3 இடத்தில பேட்டிங், இக்கட்டான நேரத்தில் பௌலிங், சிறப்பான பீல்டிங் என முப்பரிமாண வீரர். அதுமட்டுமன்றி வீரர்களை உற்சாகப்படுத்துவது, பௌலர்க்கு டிப்ஸ் என கலக்குவதால் தான் MrIPL என்ற செல்ல பெயரும் உண்டு.

உண்மை ட்ரெஸ்ஸிங் ரூம் பிரச்சனை என யாருக்கும் தெரியாது, ஆனால் சொந்த காரணம் என்பதோடு முடித்துக்கொண்டனர் ரெய்னா மற்றும் நிர்வாகம் தரப்பு. அடுத்த சீசன் புதிய ஆஹமதாபாத் டீம் உருவாகிறது, அதற்கு செல்வார் ரெய்னா என பலரும் கிசு கிசுத்தனர்.

இந்நிலையில் சி எஸ் கே ட்விட்டர் பக்கத்தில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து ஸ்டேட்டஸ் போட்டார் அட்மின்.

csk

இதனை பார்த்த ரசிகர்கள் தோனி தலையிட்டு சுமுகமாக முடித்து இருப்பார் பிரச்னையை, எனவே சின்ன தல கண்டிப்பாக ஆடுவார் வரும் சீசன் சென்னைக்காக என்கின்றனர் ரசிகர்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top