சிவகார்த்திகேயனுக்கும் சின்னத்திரை தொகுப்பாளினி டிடி எனப்படும் திவ்ய தர்ஷினிக்கும் இன்று பிறந்தநாள். சமூக வலைத்தளங்களில் அவர்களின் ரசிகர்கள் வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.

காமெடி ஹீரோவாக மட்டுமின்றி ஆக்‌ஷன் ஹீரோவாகவும் ட்ரெண்டில் உலாவரும் சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதை வென்றவர். சின்னத்திரை தொகுப்பாளராக தோன்றி பின் ஹீரோவாக உருவெடுத்த சிவா மிமிக்ரியில் செய்யாத சேட்டைகள் இல்லை. சிவகார்த்திகேயன் தனது 32 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

சின்னத்திரை தொகுப்பாளினியாக வலம் வந்து தனது கலகல சிரிப்பினாலும், படபட பேச்சினாலும் அனைவருடைய மனதிலும் இடம்பிடித்தவர் திவ்ய தர்ஷினி. இவரை திவ்ய தர்ஷினி என்றால் பலருக்கு தெரியாது. டிடி என்பதே இவரின் செல்ல பெயர். பலருடைய வீட்டில் செல்ல மகளாக வாழ்ந்து வரும் டிடி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.