Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹன்சிகா தொடங்கிய புதிய தொழில்.. இதாவது ரசிகர்களிடம் வரவேற்பை பெறுமா?
சமீபகாலமாக ஹன்சிகாவை ரசிகர்கள் மறந்துவிட்டார்கள். ஒரு காலத்தில் சின்ன குஷ்பு என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா அதன்பிறகு ரசிகர்களால் தூக்கி எறியப்பட்டார்.
அதற்குக் காரணம் அவர் உடல் எடையை குறைத்தது ஒன்று. கொழுக் மொழுக் என இருந்த தனது தேகங்களை உடற்பயிற்சி செய்து எலும்பும் தோலுமாக மாறி அதிலிருந்து ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.
ரசிகர்கள் அவரை ரசிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கடைசியாக அவரது கைவசம் இருக்கும் ஒரே ஒரு படம் என்றால் அது மகா மட்டும் தான். அதுவும் சிம்பு சரியாக சூட்டிங் போகாததால் அந்த படம் இழுத்துக்கொண்டே சென்றது.
ஊரடங்கும் முடிந்த பின்னர் முதலில் சிம்பு மகா படத்தில்தான் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இனியும் சினிமா வாய்ப்பு வராது என தெளிவாக தெரிந்து கொண்டவர் தற்போது பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளாராம்.
பலூன் பிசினஸ் என்கிறார்கள். நீங்கள் நினைக்கும் மாதிரி பண்டிகைக்கு பலூன் ஊதி விற்பது அல்ல. பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் திருமணங்கள் போன்றவற்றில் பலூன் டெக்கரேஷன் செய்து வைப்பார்கள் அல்லவா.
அந்த தொழிலில்தான் இறங்கியுள்ளாராம். இதுவாவது நமக்கு கை கொடுக்குமா என்பதை பார்ப்போம் என மிகவும் சோகமாக காட்சி அளிக்கிறார் ஹன்சிகா மோத்வானி.
