Hansika Motwani
Hansika Motwani

ஹன்சிகா மோட்வானி ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார்.

hansika
hansika

ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார் (இது சஞ்சு என்ற பையனைப் பற்றியும் அவனது மந்திரப் பென்சிலைப் பற்றியதுமான கதையாகும்).

அதே நேரத்தில் தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத் என்ற இந்தியத் தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார். இதற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை அவர் பெற்றார்.

கோய் மில் கயா திரைப்படத்தில் வரும் குழந்தைகளில் ஒருவராகவும் நடித்திருந்தார்.

ஹன்சிகா விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தவர். ஆனால், சமீப காலமாக பெரிய படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கின்றார்.

இவை அனைத்திற்கும் காரணம் உங்கள் உடல் எடை அதிகரித்துவிட்டது என பலரும் அவருக்கு அட்வைஸ் கூறியிருப்பார்கள் போல.உடனே தன் உடல் எடையை பாதியாக குறைத்து சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்களுக்கு செம்ம ஷாக், இதோ…