குளியல் அறை வீடியோவை வெளியிட்ட ஹன்சிகா..

தமிழ் சினிமா ரசிகர்களால் குட்டி குஷ்பூ என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ஹன்ஷிகா. கொழுக் மொழுக் என பப்ளியாக இருந்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையவே தமிழில் முன்னணி நடிகையானார். விஜய், தனுஷ், சிம்பு என பெரிய நடிகர்களின் படங்களில் நடித்த அவர் ஜோதிகா, நயன்தாரா போன்று ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

கடைசியாக தமிழில் அதர்வாவுடன் 100 என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து உடல் எடை கூடிக்கொண்டே சென்றதால் பட வாய்ப்புகளை இழந்தார். இதையடுத்து இரண்டாம் தர நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு இறங்கி வந்தார். தனது உடல் எடைதான் தனக்கு வில்லி என்பதை அறிந்துகொண்ட ஹன்ஷிகா, தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் ஆனார்.

இதையடுத்து தான் விட்ட இடத்தை பிடித்துவிட வேண்டுமென தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றிவந்தார். தற்சமயம் இவர் கைவசம் தமிழில் 2, தெலுங்கில் 2 படங்கள் உள்ளன.

சமீபத்தில்தான் இவர் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தனது பிகினி படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய அவர் தற்போது பாத்ரூம் டப்பில் தான் படுத்திருப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்து ஜொள்ளுவிட்டு வரும் இளசுகள், ஹன்சிகா நிச்சயம் விட்ட இடத்தை பிடித்துவிடுவார் என கூறிவருகின்றனர். தற்போது ஹன்சிகா ஜமீல் இயக்கத்தில் “மஹா” என்ற படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்