hansika-tamannaகோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தாலும் மற்ற பிரபல நடிகைகளுடன் இணைந்து நடிக்க ஹன்சிகா தயங்கியதில்லை என்பது ‘சிங்கம் 2’ மற்றும் ‘அரண்மனை 2’ போன்ற படங்களில் இருந்து தெரிய வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபல நடிகையுடன் ஹன்சிகா இணைந்துள்ளார். அவர்தான் தமன்னா.

ஹன்சிகாவும் தமன்னாவும் இதுவரை எந்த ஒரு படத்திலும் இணைந்து நடிக்கவில்லை எனினும் முதல்முறையாக தற்போது ஒரு விளம்பர படத்திற்காக இணைந்துள்ளனர். சென்னையில் உள்ள பிரபல டெக்ஸ்டைல் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நடைபெற்ற படப்பிடிப்பின்போது இருவரும் இணைந்து எடுத்த செல்பி புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது