Tamil Cinema News | சினிமா செய்திகள்
கையில் ரத்தக்கறையுடன் உடம்பில் துணி இல்லாமல் ஹன்சிகா – பிறந்தநாளன்று வெளியான போஸ்டர்
குழந்தை நட்சத்திரமாக விளம்பர நிகழ்ச்சிகள், சின்னத்திரை நாடகங்கள் தொடங்கி படங்களிலும் தோன்றி பின்னர் முன்னணி நடிகையாக மாறியவர் தான் ஹன்சிகா மோத்வானி.
தமிழில் சின்ன குஷ்பூ என்ற அடைமொழியுடன் அறிமுகம் ஆனவர். இன்று ஹன்சிகா ஹிந்தி, தெலுங்கு, கன்னட, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். எனினும் புசு புசுவென இருந்த சூழலில் கிடைத்த வாய்ப்பு ஏனோ ஸ்லிம் பிட் ஆன பின் அமையவில்லை. தமிழில் மஹா படம் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது.
ஹன்சிகாவின் 50 வது படம் மஹா. கதாநாயகியை மையப்படுத்தும் கதையம்சம் உள்ள படம். எக்ஸெக்ட்ரா நிறுவனம் தயாரித்துள்ளது. ஜமீல் இயக்குகிறார். இவர் போகன், ரோமியோ ஜூலியட் இயக்குனர் லக்ஷ்மனிடம் உதவியாளராக இருந்தவர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சேர ரிலீஸ் ஆகின்றது. மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். ஜிப்ரான் இசையில் 25 வது படம். இப்படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.
இன்று தனது 29 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் ஹன்சிகா. அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Hansika in Mahaa
இதனை முன்னிட்டு ‘மஹா’ திரைபடக்குழுவினர், பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
