பிரபல மலையாள இயக்குனர் உன்னிகிருஷ்ணன் நடிகர் மோகன்லாலை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மோகன்லாலின் மனைவியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார்.

இப்படத்தில் தென்னந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமாகிய விஷால் மலையாள படத்தில் முதன் முறையாக வில்லனாக அறிமுகம் ஆகிறார்.

இப்படத்திற்கு “வில்லன்” என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஹன்சிகா முதன் முதலில் மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.இந்த படத்தை விஷால் மற்றும் ஹன்சிகா ரசிகர்கள் எப்போது வெளியாகும் என எதிர்நோக்கியுள்ளனர்.