புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

KGF, காந்தாரா படங்களை தயாரித்த ஹம்பாலேவின் அடுத்த பிரமாண்ட படம்.. OTT ரிலீஸ்.. படம் எப்படி இருக்கு?

இந்திய சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது ஹம்பாலே நிறுவனத்தின் தயாரிப்புகள். கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் நின்னிண்டேல் படத்தை முதலில் தயாரித்தது.

அதன்பின், யாஷின் மாஸ்டர் பீஸ் படமும், ராஜகுமாரா சந்தொஷ் ஆனந்தம் படக்களை தயாரித்தது. அதன்பின், 4 வது படமாக யாஷுடன் கூட்டணி அமைத்த படம் தான் கேஜிஎஃப் -1. இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். வசூலில் கலக்கிய பின், கேஜிஎஃப் 2, காந்தாரா, சலார் ஆகிய படங்களை தயாரித்து அதிக வசூல் குவித்தது.

ஹம்பாலே நிறுவனத்தின் அடுத்த பிரமாண்டம் பஹீரா

இதையடுத்து, ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படம் உலகம் முழுவதும் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. இப்படி இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட் உள்ள படங்களாக தயாரித்து வரும் ஹம்பாலே நிறுவனம் அடுத்து, பிரசாந்த் நீல் கதை எழுத, சூரி இயக்கத்தில் உருவான படம் பஹீரா.

இப்படத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி ஹீரோவாக நடித்திருந்தார். இவர் பிரசாந்த் நீலின் தங்கையை திருமணம் செய்து கொண்டவர். இவர் தான் பிரசாந்த் நீலின் முதல் படமாக உக்ரம் படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். ஹம்பாலே படத்தின் தயாரிப்பு என்றாலே பிரமாண்டமாகவும், தரமாகவும் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல் இப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில், இப்படம் உலகம் முழுவதும் ரூ.30 கோடி வசூலித்தது. இந்த நிலையில், நேற்று இப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. சில படங்கள் தியேட்டரில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்கள் பெற்றால், ஓடிடியில் வெளியாகும் போது நல்ல வரவேற்பை பெறும்.

அந்த வகையில், ஸ்ரீமுரளி,ருக்மணி வசந்த், அச்சுத்குமார், ராமச்சந்திர ராவ் நடிப்பில், அஜனீஷ் லோக் நாத் இசையில், சேத்தன் டி சோஸாவின் ஸ்டண்ட் ஆகியோரின் பங்களிப்பில் காதல் – ஆக்சன் – த்ரில்லர் பாணியில் உருவான பஹீரா படம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ள நிலையில் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என தெரிகிறது.

தமிழில் வெளியான கொடிபறக்குது, ஹீரோ ஆகிய படங்களில் வந்த கதை தான் இப்படத்திலும் இருந்தாலும் திரைக்கதை, மேக்கிங் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News